What is Share Market (Tamil)
அன்பார்ந்த வாசிப்பாளர்களே வணக்கம்.இந்த பதிவில் Share Market என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக உங்களுக்கு புரிய வைக்கிறேன்.அதற்கு முன் ஷேர் மார்க்கெட் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஷேர் மார்க்கெட் என்ற சொல்லை கேட்டவுடனே பலரும் அதனை ஒரு சூதாட்டம் என்றும் அதில் பணம் போட்ட அனைவரும் அதனை இழந்துவிட்டதாக பலர் கூற நீங்கள் கேட்டிருக்கலாம்.
ஆனால் உண்மையில் பலர் மார்க்கெட்டில் பணத்தை போட்டால் அது ஏறிக்கொண்டே தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Share Market -ல் உள்ள ஒரு நிறுவனத்தின் விலை Supply மற்றும் Demand ஆகிய இரண்டை பொருத்தே விலை ஏற்றமும், இறக்கமும் ஆகும்.
எடுத்துக்காட்டாக ஒரு ஊரில் ஒரு கடை இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அங்கு 100 தக்காளிகள் மட்டுமே உள்ளது.அந்த ஊரில் 100 பேர் உள்ளனர்.இப்போது அந்த 100 பேரும் ஆளுக்கு ஒரு தக்காளி என வாங்கும் போது அனைவருக்கும் கிடைக்கும்.விலை மாற்றம் இருக்காது.கடைகாரர் வாங்கிய விலையில் இருந்து சிறிய லாபம் வைத்து விற்றுவிடுவார்.
அதே சமயம் ஒரு வேளை யாரேனும் 10 பேர் ஆளுக்கு 5 தக்காளி என வாங்கிவிட்டால், மீதமுள்ள 50 தக்காளியை 90 பேருக்கு விலையை அதிகமாக விற்பார்.இதே தான் ஷேர் மார்க்கெட்டிலும் நடக்கும்.
மார்க்கெட்டிங் Share விலை செய்திகளின் வாயிலாக ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.மேலும் ஒரு நிறுவனத்தைத் பற்றி நல்ல செய்தி வரும் போது அந்த நிறுவனத்தின் விலை ஏற்றமும், கெட்ட செய்தி வரும்போது இறக்கமும் அடையும்.
ஒரு ஷேருக்கான நல்ல செய்தி மற்றும் கெட்ட செய்தி என்பது Market அதனை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடும்.
Share Market என்றால் என்ன?
நிறுவனங்களின் பங்குகளை வாங்குபவர்களையும், விற்பவர்களையும் இணைக்கும் இடம் தான் Share Market.
Share Market Meaning in Tamil:
Share Market தமிழில் பங்கு சந்தை என்று அழைக்கப்படும்.
ஏன் நிறுவனங்கள் Share Market -ல் பட்டியலிடப்படுகிறது?
ஷேர் மார்க்கெட் -ல் ஏன் நிறுவனங்கள் பட்டியலிடப்படுகின்றன என்பதை நாம் ஒரு எடுத்துக்காட்டு மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க நினைக்கிறீர்கள் அதற்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.உங்களிடம் ஒரு கோடி இருந்தால் நீங்களே மொத்த பணத்தையும் போட்டு நிறுவனத்தை ஆரம்பிக்கலாம்.
இல்லையெனில் உங்களிடம் 50 இலட்சம் உள்ளது என்றால் உங்கள் நண்பர்களிடம் கூறி அவர்களை நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய சொல்லலாம்.இப்படி செய்வதன் மூலம் அவரவர் செய்துள்ள முதலீடு படி அவரவருக்கு பங்குகள் கிடைக்கும்.
மேலும் சில ஆண்டுகளில் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவோ, நிறுவனத்தின் கடன்களை அடைக்கவோ அல்லது நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்க முதலீட்டாளர்கள் விரும்பினால் SEBI (செபி) யிடம் தங்கள் நிறுவனத்தின் தகவல்கள் அனைத்தையும் கொடுத்து அனுமதி பெற்று பங்குகளை மக்களின் விற்று பணம் பெற முடியும்.
இதன் மூலம் நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் பெற்று அதற்கு அதிகமாக Intrest (வட்டி) செலுத்தவேண்டிய நிலை இருக்காது.மேலும் நிறுவனங்களில் இருந்து வரும் Profit (லாபம்) பங்குதாரர்களுக்கு Dividend (ஈவு தொகை) வழங்கப்படும்.
முக்கிய குறிப்பு:
இந்த பதிவில் குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் முழுக்க முழுக்க கல்வி ரீதியாக உருவாக்கப்பட்டுள்ளது.நாங்கள் எந்த ஒரு பங்கையும் வாங்கவோ, விற்கவோ சொல்வதில்லை.
மேலும் நாங்கள் (SEBI) செபியிடம் பதிவு பெற்ற ஆலோசகர் கிடையாது.எனவே எந்த ஒரு முதலீடு செய்யும் முன் செபியிடம் பதிவு பெற்ற ஆலோசகர் விடம் கலந்து ஆலோசித்து முதலீடு செய்யவும்.