அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்.நாம் இந்த பதிவில் Nifty 50 மற்றும் Sensex என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
Nifty 50 & Sensex என்றால் என்ன?
நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் ஆகியவை பங்குச்சந்தை குறியீடுகள் (Indices).பம்பாய் பங்குச்சந்தை (BSE) குறியீடு சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை (NSE) குறியீடு நிஃப்டி ஆகும்.
நிஃப்டி 50 என்றால் என்ன?
தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் முதல் 50 நிறுவனங்கள் நிஃப்டி 50 என்று அழைக்கப்படும்.இந்த 50 நிறுவனங்களின் ஏற்ற இறக்கங்களை பொருத்து தான் நிஃப்டி மேலே ஏறுவதும், கீழே இறங்கவும் செய்யும்.
National Stock Exchange 1996-ல் 1000 பாய்ண்டுகளுடன் வர்த்தகம் தொடங்கப்பட்டது.மேலும் Nifty 50-ல் உள்ள நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்படும் வேறு நிறுவனங்கள் நிஃப்டி உள்ளே கொண்டுவரப்படும்.நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத நிறுவனங்கள் நிஃப்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
சென்செக்ஸ் என்றால் என்ன?
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் முதல் 30 நிறுவனங்களின் குறியீடு சென்செக்ஸ் என்று அழைக்கப்படும்.Sensex, S&P Bse sensex என்றும் அழைக்கப்படும். பம்பாய் பங்குச்சந்தை (BSE) இந்தியாவின் பழைமையான சந்தை குறியீடு.சென்செக்ஸ் ஜனவரி 1, 1986-ஆம் ஆண்டு முதலில் 100 பாய்ண்டுகளுடன் வர்த்தகத்தை துவங்கியது.