அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்.நாம் இந்த பதிவில் Investing மற்றும் Trading இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
Investing (பங்கு முதலீடு) என்றால் என்ன?
குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திலோ அல்லது பல நிறுவனங்களிலோ உங்களுடைய பணத்தை முதலீடு செய்து நீண்ட காலம் பொறுமையாக காத்திருந்து அந்நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சியில் உங்களுடைய சிறிய முதலீடு மூலம் மிகப்பெரிய இலாபத்தை சம்பாதிக்க முடியும்.
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு கிலோ மாம்பழத்தை பணம் கொடுத்து வாங்குகிறீர்கள்.அந்த பழத்தை சாப்பிட்டுவிட்டு கொட்டையை நிலத்தில் பயிர் செய்து விடுகிறீர்கள்.5 முதல் 7 ஆண்டுகளில் அந்த பயிர் மரமாக வளர்கிறது.
இப்போது அந்த மரத்தில் பூக்கள் பூத்து, காய்கள் காய்த்து பழங்களாக மாறுகிறது.நீங்கள் மேலும் அந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டைகளை உங்களுடைய விளை நிலங்களில் பயிர் செய்கிறீர்கள்.மேலும் அந்த பயிர்கள், பல மரங்களாக 5,6 ஆண்டுகளில் தோப்பாக மாறுகிறது.பின்பு விளையும் டன் கணக்கில் உள்ள மாம்பழங்களை சந்தையில் விற்று பணமாக மாற்றுகிறீர்கள்.
இதில் நீங்கள் பணம் கொடுத்து வாங்கிய ஒரு கிலோ மாம்பழத்தின் விலை என்பது 100 ரூபாயக கூட இருக்கலாம்.ஆனால் அதனை பயிர் செய்து மரமாக மாற்றி அந்த மரத்தில் இருந்து வரும் பழங்களையும் மரமாக மாற்றி 20 முதல் 30 ஆண்டுகள் காத்திருந்து அதில் இருந்து கிடைக்கும் இலாபம் தான் Investing (பங்கு முதலீடு) ஆகும்.
ஒரு நல்ல நிறுவனத்தை தேர்வு செய்து அதனை மதிப்பாய்வு செய்து நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் போது அந்நிறுவனம் ஈவு தொகை (Dividend), பங்கு பிரிப்பு (Split), போனஸ் (Bonus) என கொடுத்து உங்களுடைய லட்சங்களை, பல கோடிகலாகவும் மாற்றும்.
Trading (பங்கு வர்த்தகம்) என்றால் என்ன?
Trading என்பது சந்தை விலைகளில் விளக்கப் படங்களைப் (Chart) பார்த்து அதில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையாகும்.இதில் பங்கு வர்த்தகர்கள் (Traders) நிமிடங்கள் முதல் மாதங்கள் வரையிலான குறுகிய கால நிலைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும்.
எடுத்துக்காட்டாக மாம்பழங்களை குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்பது போன்றது.என்ன தான் வாங்கி விற்பது என்றாலும் குறைந்த காலத்தில் சந்தையை கணிப்பது என்பது மிகக் கடினமானது.
குறிப்பு:
இந்த பதிவில் குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் முழுக்க முழுக்க கல்வி ரீதியாக உருவாக்கப்பட்டது.நாங்கள் எந்த ஒரு பங்கையும் வாங்கவோ, விற்கவோ சொல்வதில்லை.
மேலும் நாங்கள் செபியிடம் பதிவு பெற்ற ஆலோசகர் கிடையாது.எனவே எந்த ஒரு முதலீடு செய்யும் முன் செபியிடம் பதிவு பெற்ற ஆலோசகரிடம் கலந்தாலோசித்து முதலீடு செய்யவும்.