அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்.நாம் இந்த பதிவில் செல்வமகள் சேமிப்பு திட்டம் | Selva Magal Semippu Thittam என்றால் என்ன? அதன் சிறப்புகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் (Selva Magal Semippu Thittam) என்றால் என்ன?
இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி இந்த திட்டம் துவக்கப்பட்டது.
பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமண செலவுக்காக கொண்டுவரப்பட்ட சேமிப்பு திட்டமாகும்.இந்திய அளவில் சுகன்யா சம்ரிதி யோஜனா என்றும் தமிழ்நாட்டில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரிலோ அல்லது பெற்றோர், பாதுகாவலர் பெயரில் அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் இத்திட்டத்தினை துவங்க முடியும்.
மேலும் ஒரே குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும் ஏதாவது இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த கணக்கை துவங்க முடியும்.மற்ற குழந்தைகளுக்கு PPF Account திறந்து கொள்ளலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்க பெண் குழந்தை இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் அல்லது இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் சிறப்புகள் | Selva Magal Semippu Thittam benefits
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன.அவை
பாதுகாப்பானது:
இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு 200% பாதுகாப்பு உள்ளது.
முதலீட்டு முறைகள்:
எந்த வங்கியில் அல்லது அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அங்கு நேரடியாக சென்று டெபாசிட் செய்யலாம் அல்லது மொபைல் பேங்கிங், இண்டர்நெட் பேங்கிங் வாயிலாக டெபாசிட் செய்யலாம்.
முதிர்வு காலம்:
15 ஆண்டுகள் டெபாசிட் செய்யவேண்டும்.பிறகு 6 ஆண்டுகள் கழித்து கணக்கை மூடி பணத்தை பெற்று கொள்ளலாம்.
வரிச் சலுகை:
இந்த திட்டத்தில் செய்யும் மூதலீடு மற்றும் வட்டிக்கு 80c பிரிவின் கீழ் வரிச்சலுகை உண்டு.
கணக்கு செயலிழப்பு:
ஒரு வேளை குறைந்தபட்ச டெபாசிட் தொகை செலுத்த தவறினால் ஒவ்வொரு ஆண்டுக்கும் 50 ரூபாய் அபராதமும், ஒவ்வொரு ஆண்டுக்கான டெபாசிட் தொகையும் செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக 3 ஆண்டுகள் எந்த வித தொகையும் செலுத்தவில்லை எனில் மூன்று ஆண்டுக்கு அபராத தொகை 150 மற்றும் 750 டெபாசிட் தொகை செலுத்தி கணக்கை திரும்ப பெற்று கொள்ளலாம்.
கணக்கை முன்கூட்டியே மூடலாமா?
கணக்கு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் இறந்தால் கணக்கை மூடி பணத்தை பெற்று கொள்ளலாம்.மேலும் கணக்கு வைத்திருப்பவருக்கு மோசமான உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, பெண்ணின் பாதுகாவலர் அல்லது பெற்றோர் இறந்து கணக்கில் பணம் செலுத்துவது தடைபட்டாலோ கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்தில் தகுந்த ஆதாரத்தை காண்பித்து கணக்கை முன்கூட்டியே மூடி கொள்ளலாம்.
இடையில் பணம் எடுக்கலாமா?
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் பெண் 10 ஆம் வகுப்பு நிறைவு அடைந்தாலோ அல்லது 18 வயது நிறைவு பெற்றிருந்தாலோ மேற்படிப்புக்காக மொத்த தொகையில் 50% வரை பணத்தை பெற்று கொள்ளலாம்.
கணக்கை எப்போது மூடலாம்?
இத்திட்டத்தில் கணக்கு துவங்கி 21 வது ஆண்டு நிறைவடைந்த பின் அல்லது பெண்ணுக்கு 18 வயது நிறைவு அடைந்தால் திருமணத்திற்காக அல்லது மேற்படிப்புக்காக கணக்கை மூடி பணத்தை பெற்று கொள்ளலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் | Selva Magal Semippu Thittam Intrest Rate
தற்போது 8.2% வட்டி கொடுக்கப்படுகிறது. (பிப்ரவரி 2025)
Usefull content 😍