ஈவு தொகை (Dividend) என்றால் என்ன? ஏன் ஈவு தொகை வழங்கப்படுகிறது!!!

ஈவு தொகை (Dividend) என்றால் என்ன? ஏன் ஈவு தொகை வழங்கப்படுகிறது!!!

ஈவு தொகை என்றால் என்ன? | Dividend meaning in Tamil 

அன்பார்ந்த Tamilbloggers.com வாசகர்களே வணக்கம்.நாம் இந்த பதிவில் ஈவு தொகை (Dividend) என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
Dividend meaning in Tamil, What is Divided in Tamil, Dividend in Tamil

Dividend Meaning in Tamil:

Dividend என்பது தமிழில் ஈவு தொகை என்று அழைக்கப்படும்.

Dividend என்றால் என்ன?

நிறுவனம் ஒரு ஆண்டில் கிடைத்த இலாபத்தின் ஒரு பகுதியை ஒவ்வொரு பங்குதாரருக்கும் பிரித்து வழங்குவதற்கு பெயர் தான் Dividend.

நிறுவனங்கள் ஏன் ஈவு தொகை வழங்குகிறது?

ஈவு தொகை வழங்குவதற்கு முதல் காரணம் முதலீட்டாளர்களை ஈர்ப்பது தான்.மேலும் ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் உரிமையாளரிடம் அதிகமாக இருக்கும் குறைவாகவே மற்ற பங்குதாரர்களிடம் இருக்கும்.
நிறுவனத்தில் ஒரு வருட இலாபத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஈவு தொகை (Dividend) வழங்குவதற்கு ஒதுக்கி, அதனை பிரித்து வழங்குவதன் மூலம் அதிகபட்சமாக நிறுவன உரிமையாளருக்கு ஈவு தொகை கிடைக்கும்.
ஈவு தொகை வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகரிக்கும்.

ஈவு தொகை வழங்குவதற்கான முக்கிய தேதிகள்:

Share Market -ல் சனி, ஞாயிறு ஒரு சில விடுமுறை நாட்கள் தவிர மற்ற தினங்களில் ஒவ்வொரு பங்கும் தினசரி வர்த்தகம் செய்யப்படும்.
எனவே நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்கும்.அந்த தேதியில் யார் யாரிடம் பங்குகள் உள்ளதோ அவர்களுக்கு ஈவு தொகை டி-மேட் கணக்கு வைத்துள்ள வங்கியில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

முக்கியமான தேதிகள்:

  • அறிவிப்பு தேதி (Announcement Date)
  • பதிவு தேதி (Registration Date)
  • முன்னால் ஈவு தொகை தேதி (Ex-Dividend date)
  • பணம் செலுத்தும் தேதி (Payment Date)

அறிவிப்பு தேதி:

இந்த தேதியில் தான் நிறுவனத்தின் காலாண்டு (Quarterly) அல்லது வருடாந்திர (Annual) கூட்டம் நடைபெறும்.இதில் நிறுவனத்தின் வரவு, செலவு, இலாபம் முதலியவை பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.இந்த நாளில் தான் Dividend குறித்த முடிவுகளும் எடுக்கப்படும்.

பதிவு தேதி:

பதிவு தேதி, நிறுவனம் ஈவு தொகை பெற தகுதியான பங்குதாரர்களின் பட்டியலை உருவாக்கும்.

முன்னால் ஈவு தொகை தேதி:

எடுத்துக்காட்டாக 27/02/2025 முன்னால் ஈவு தொகை (Ex-Dividend date) என நிறுவனம் அறிவித்திருந்தார், அந்த தேதிக்கு முந்தைய பங்கு வர்த்தகம் நடந்த நாளில் அந்நிறுவனத்தின் பங்கு Demat கணக்கில் இருந்திருக்க வேண்டும்.
Ex-Dividend date அன்று பங்கை வாங்கினால் ஈவு தொகை வழங்கப்பட மாட்டாது.

பணம் செலுத்தும் தேதி:

இந்த தேதியில் அறிந்த ஈவு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *