What is Mutual fund in Tamil:
அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்.நாம் இந்த பதிவில் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual fund) பற்றி விரிவாக பார்ப்போம்.மேலும் மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்வது, அதன் நன்மை, தீமை பற்றி பார்ப்போம்.
இந்த 2025-ல் மியூச்சுவல் ஃபண்டுகள் மிக பிரபலமடைந்து விட்டன. ஏன் தெரியுமா? மக்களுக்கு முதலீடுகள் பற்றிய விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் சேமிப்பு என்பது வங்கிகளில் நிலையான வைப்புநிதி (Fixed Deposit) மற்றும் தொடர் வைப்புநிதி (Recurring Deposit) என இவ்விரண்டு வழிகளில் மட்டுமே இருந்த சேமிப்பு கடந்த 4 ஆண்டுகளில் டிமேட் அக்கவுண்ட் (Demat account) திறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகமாகி உள்ளது.குறிப்பாக 2024 ஆண்டு மட்டும் 46 இலட்சம் அக்கவுண்டுகள் திறக்கப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் (Mutual fund) என்றால் என்ன?
பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று, பெறப்பட்ட பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம் தான் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும்.இதில் முதலீட்டாளர்களின் அபாயங்கள் குறைக்கப்படும்.
மேலும் மியூச்சுவல் ஃபண்டுகள், ஃபண்ட் மேனேஜர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.ஃபண்ட் மேனேஜர் ஒவ்வொரு கால நிலைகளுக்கு ஏற்ப ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யவும், தக்க சமயத்தில் அந்நிறுவனத்தில் இலாபத்துடன் வெளியேறவும் செய்வார்.
Mutual Fund Meaning in Tamil:
Mutual Fund என்பதற்கு தமிழில் பரஸ்பர நிதி என்று அர்த்தம்.
மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது நமக்கு, ஃபண்டின் NAV ( Net Asset Value) அடிப்படையில் யூனிட்கள் ஒதுக்கப்படும்.ஃபண்டின் NAV என்பது அதன் ஒரு பங்கு மதிப்பு.
முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கான பங்குகள் NAV ஆகியவற்றின் அடிப்படையில் யூனிட்களாக ஒதுக்கப்படுகின்றன.
NAV எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பை நிலுவையில் உள்ள பங்குகளின் எண்ணிக்கையில் வகுப்பதன் மூலம் ஒரு NAV-ன் மதிப்பு கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக நிதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.10,000 மற்றும் ஃபண்டில் 1000 பங்குகள் நிலுவையில் உள்ளன.மொத்த சொத்து மதிப்பு, நிலுவையில் உள்ள பங்குகளால் வகுக்கப்படும் போது NAV ரூ.100 ஆகும்.
Net Asset Value மார்க்கெட் செயல்படும் ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படும்.எனவே இதன் மதிப்பும் மாறிக்கொண்டே இருக்கும்.ஃபண்டில் உள்ள பங்குகளின் ஏற்ற இறக்கங்களை பொறுத்து NAV மேலே, கீழே செல்லும்.NAV மதிப்பு கீழே இறங்கும் போது முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்படி முதலீடு செய்வது?
பொதுவாக மூன்று வழிகளில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
Mutual fund website:
ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்டுகளும் தங்களுக்கென இணையதளத்தை வைத்துள்ளன.அதில் கணக்கை உருவாக்கி அதில் முதலீடு செய்ய இயலும்.வெவ்வேறு நிறுவனங்களின், பல நிதிகளில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த முறை சிறப்பாக இருக்காது.
Banks:
வங்கிக் கணக்கில், மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் வாயிலாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.ஆனால் வங்கிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிதிகளை மட்டுமே ஊக்குவிக்கும்.எனவே உங்களுக்கு தேவையான திட்டங்களை கண்டறியும் வாய்ப்பினை இது குறைக்கலாம்.
Online Brokers:
தற்போது பல தரகு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கியும், விற்றும் கொடுக்கின்றன.மேலும் அவை உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற ஃபண்டுகளையும் கண்டறிய உதவும்.
Groww, Zerodha வின் Coin, Angle one போன்ற நிறுவனங்கள் மக்களால் பெரிதும் விரும்பி முதலீடு செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் நன்மைகள்:
Diversification:
Mutual fund-ளின் சிறப்பே Divirsification தான்.ஏன் தெரியுமா?
நம்மிடம் உள்ள அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க கூடாது என்பார்கள்.
அதே போல நம்முடைய சேமிப்பையும், முதலீட்டையும் ஒரே இடத்தில் வைக்க கூடாது.Mutual fund-ல் முதலீடு பல்வேறு வகையான நிறுவனங்கள் மற்றும் பிற இதர சொத்துகளில் பகிரப்படுவதால், ஏதாவது ஒரு நிறுவனத்தின் மோசமான செயல்பாடு ஒட்டுமொத்த முதலீட்டையும் பாதிப்படைய செய்யாது.
Liquidity:
ஒரு சில முதலீடுகளில் நாம் செய்யும் முதலீடுகளை விற்று உடனடியாக பணத்தை வெளியே எடுக்க முடியாது.ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் நமது முதலீட்டை எந்த சூழ்நிலையிலும் விற்று பணத்தை வெளியே எடுக்க முடிந்த அளவுக்கு பண புழக்கம் இருக்கும்.
Professional Management:
ஃபண்ட் மேனேஜர்கள் தங்களுடைய நிபுணத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகள் மூலம் நம்பிக்கையிலான நிறுவனங்களில் முதலீட்டை செய்கிறார்கள்.
Low Price Mutual fund’s:
ஒரு சில ஃபண்டுகள் 10 ரூபாய் முதல் முதலீடு செய்ய வழி வகை செய்துள்ளனர்.இதன் மூலம் சிறு முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் ஃபண்டுகளை வாங்க முடியும்.
Transparency:
ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகள் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை தங்களது முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கின்றன.இதனான் அந்த ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்களது முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும்.
Regulatory Oversight:
ஒவ்வொரு ஃபண்டுகளும் The Securities and Exchange Board of India (SEBI) கீழ் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை கிடைக்கிறது.
Flexibility:
ஒரு சில ஃபண்டுகள் குறைந்த மற்றும் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றாற்போல் கிடைக்கின்றன.
Dividend Reinvest:
Mutual fund தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களில் இருந்து வரும் ஈவு தொகையை மீண்டும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.இதனால் முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு இலாபம் கிடைக்கும்.
Tax Relaxation:
மியூச்சுவல் ஃபண்டுகளில் ELSS எனும் ஃபண்ட் வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 1.5 இலட்சம் வரையிலான முதலீட்டுக்கு 46,800 வரை வரியை சேமிக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்டுகளின் தீமைகள்:
Fluctuation:
மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை ஏற்ற இறக்கங்களை பொறுத்தது.எனவே மாதாமாதம் நிலையான வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது.
Less Control:
Mutual fund முதலீட்டில் உங்களுடைய கட்டுப்பாடு, நேரடி முதலீடுகளை காட்டிலும் குறைவாகவே இருக்கும்.மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொறுத்தவரை, ஃபண்டின் பங்குகள் தொடர்பான அனைத்து முடிவுகளும் ஃபண்ட் மேனேஜரால் எடுக்கப்படுகின்றன.
Fees & Expenses:
Mutual fund முதலீட்டில் மேலாண்மை கட்டணம், இயக்க செலவுகள் வாங்குதல் மற்றும் விற்பனை சுமைகள் போன்ற கட்டணங்களை உள்ளடக்கியது.இந்த செலவுகள் முதலீட்டாளர்களின் இலாபத்தை குறைக்கும்.
Divirsification:
Divirsification முதலீட்டில் உள்ள அபாயத்தை குறைக்கும் என்றாலும் ஒரு சில நிறுவனங்களில் இருந்து வரும் அதிகப்படியான இலாபத்தையும் குறைக்கும்.
Performance Fluctuation:
மியூச்சுவல் ஃபண்டுகள், ஃபண்ட் மேனேஜர் கீழ் பங்குகள் வாங்குவது, விற்பது குறித்த செயல்பாடுகள் நடைபெறுகிறது.எனவே அவருடைய செயல்திறனையும் பொறுத்துதான் ஃபண்டின் இலாபமும் இருக்கும்.
Past Performance:
ஃபண்டின் முந்தைய செயல்திறனை பார்த்து முதலீடு செய்வது அந்த ஃபண்டு எதிர்காலத்தில் அதே செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்காது.
Capital Gain Tax:
முதலீட்டில் இருந்து வரும் இலாபங்கள் மூலதன ஆதாய வரி, விதிகளின் படி வரிக்குட்பட்டது மற்றும் முதலீட்டாளர்களுக்கு வரிச் சுமையை ஏற்படுத்தலாம்.
Mutual fund முதலீட்டு முறைகள்:
முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு வழிகளில் முதலீடு செய்யலாம்.
Lumpsum:
நீங்கள் மிகப் பெரிய தொகையை செலுத்தி முதலீடு செய்யும் போது அந்நாளின் NAV Price-ல் உங்களுக்கு யூனிட்கள் ஒதுக்கப்படும்.
முதலீடு செய்த அந்நாளின் NAV ரூ.100 எனில் நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்யும் போது உங்களுக்கு 100 யூனிட்டுகள் ஒதுக்கப்படும்.
SIP:
SIP என்றால் Systematic Investment Plan இந்த Plan-ல் நீங்கள் மாதாமாதம் ஒரு ஃபண்டில் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் போது அந்த தொகைக்கு ஈடான யூனிட்டுகள் அந்நாளின் NAV அடிப்படையில் யூனிட்டுகள் ஒதுக்கப்படும்.