What is Power of Attorney | Power of Attorney in Tamil
அன்பார்ந்த Tamilbloggers.com வாசகர்களே வணக்கம்.நாம் இந்த பதிவில் Power of Attorney என்றால் என்ன? அது எதற்காக கொடுக்கப்படுகிறது என்று விரிவாக பார்ப்போம்.
Power of Attorney (பவர் பத்திரம்) என்றால் என்ன?
ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் தனக்கு அந்த சொத்தில் உள்ள அதிகாரத்தை தனது குடும்பத்தில் உள்ள நபருக்கோ அல்லது வேறு நபருக்கோ பத்திரத்தில் எழுதி கொடுப்பது தான் Power of Attorney என்று அழைக்கப்படுகிறது.மேலும் Power எழுதி கொடுக்கும் நபர், Power பெறும் நபருக்கு அந்த சொத்தில் எந்தெந்த அதிகாரம் செல்லுபடியாகும் என்றும் எழுதி கொடுக்கலாம்.
குறிப்பாக சொத்தின் உரிமையாளர் தனது சொத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்க நினைக்கிறார்.ஆனால் வாங்க வரும் ஒவ்வொரு வீட்டு மனைகளுக்காக தான் அலைய முடியாது என்பதற்காக வேறு ஒரு நபருக்கு அந்த குறிப்பிட்ட சொத்துக்கு மட்டும், அந்த வீட்டு மனைகளை விற்கும் வரை பவர் பத்திரம் எழுதி கொடுக்கலாம்.
Power of Attorney Meaning in Tamil:
Power of Attorney தமிழில் பொது அதிகார பத்திரம் என்று அழைக்கப்படும்.
எப்படி Power of Attorney கொடுப்பது?
சொத்தின் உரிமையாளர் நம்பிக்கையான ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு பத்திரம் எழுதி, அரசு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பவர் பத்திரம் மட்டுமே செல்லுபடியாகும்.
வெளிநாட்டில் இருந்து Power of Attorney கொடுப்பது எப்படி?
வெளிநாட்டில் இந்திய தூதரகம் அல்லது International Notary Public அலுவலகத்தில் அலுவலர் முன் பத்திரத்தில் கையெழுத்து போட்டு பவர் பெறுபவருக்கு அனுப்பலாம்.
Power of Attorney எப்போது ரத்தாகும்?
Power of Attorney எழுதும்போதே அது இவ்வளவு காலம்தான் செல்லுபடியாகும் என்று எழுதிவிட்டால் அந்த குறிப்பிட்ட காலம் முடிந்தபின் தானாகவே பவர் பத்திரம் செயலிழந்துவிடும்.மேலும் பவர் எழுதி கொடுத்தவர், பவர் வாங்கியவர் இருவரில் எவருக்காவது ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டாலோ, ஊனம் ஏற்பட்டாலோ, பவர் பத்திரம் செயலிழந்து விடும்.
பவர் கொடுத்தவர் இறந்துவிட்டால் அடுத்த நொடியே பவர் பத்திரம் செயலிழந்து விடும்.மேலும் சொத்தின் உரிமையாளர் வேறொரு நபருக்கு சொத்தை விற்றுவிட்டால் பவர் பத்திரம் ரத்து ஆகிவிடும்.
மேலும் பவர் எழுதி கொடுத்தவர் எப்போது வேண்டுமானாலும் இடையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்று தான் ஏழுதி கொடுத்த Power of Attorney -ஐ பவர் பெற்றவர் இல்லாமலே பத்திரத்தை ரத்து செய்ய முழு அதிகாரம் உள்ளது.
Power of Attorney வகைகள்:
- பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)
- தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)
பொது அதிகார பத்திரம் (General Power of Attorney) என்றால் என்ன?
ஒரு அசையா சொத்தின் முழு அதிகாரத்தையும் வழங்குவதற்கு (GPA) பொது அதிகார பத்திரம் என்று அழைக்கப்படும்.
தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney) என்றால் என்ன?
ஒரு சொத்தில் குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரத்தை வழங்குவதற்கு (Special Power of Attorney) தனி அதிகார பத்திரம் என்று அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக ஒரு சொத்தின் உரிமையாளருக்கு வாடகை வீடு உள்ளது.மேலும் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார்.எனவே வாடகை வசூலிக்கவும், வீட்டை பராமரிக்கவும் மட்டும் குறிப்பிட்ட செயலை கவனிக்க வேறொரு நபருக்கு பவரை வழங்கலாம்.