- PPF Account என்றால் என்ன?
PPF Account என்பது இந்திய அரசால் தனி நபர்களுக்காக கொண்டுவரப்பட்ட சேமிப்பு திட்டமாகும்.தொழிளாலர்களுக்கு எப்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employee Provident fund) உள்ளதோ அதே போல இந்த பொது வருங்கால வைப்புநிதி தனி நபர்களுக்காக (Public Provident fund) கொண்டுவரப்பட்டது.
இந்த Account ஐ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் திறக்க முடியும்.இத்திட்டத்தில் கூட்டு வட்டி மூலம் வட்டி கணக்கிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மார்ச் 31 தேதி கணக்கில் வரவு வைக்கப்படும்.
பொது வருங்கால வைப்பு நிதியானது 15 ஆண்டு முதலீட்டு திட்டம்.இதனை நீட்டிக்க விரும்பினால் 5, 5 ஆண்டுகளாக நீட்டித்து கொள்ளலாம்.தற்போது 7.1% ஆண்டுக்கு வட்டி வழங்கப்படுகிறது, இது ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும்.
இத்திட்டத்தில் ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாயும் அதிகபட்சம் 1,50,000 ரூபாயும் வரவு வைக்கலாம்.மேலும் இதற்கு 80C பிரிவின் கீழ் வரி சலுகை வழங்கப்படும்.
ஒரு வருடத்திற்கு, குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்தவில்லை எனில் கணக்கு முடக்கப்படும் பிறகு ஆண்டுக்கு 50 ரூபாய் அபராதமும் பணம் செலுத்தாத ஒவ்வொரு ஆண்டுக்கும் டெபாசிட் 500 செலுத்தி Account ஐ திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
PPF Meaning in Tamil:
PPF என்பதற்கு தமிழில் பொது வருங்கால வைப்புநிதி என்று அழைக்கப்படும்.
PPF Account Eligibility:
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.
- 18 வயதிற்கு கீழ் இருந்தால் பெற்றோர்களை Gaurdian ஆக வைத்து கணக்கை திறக்கலாம்.
- NRI – Non Residential Indian, PPF Account ஐ திறக்க முடியாது.
- வயது வரையரை கிடையாது.
PPF Account Opening Documents:
- Aadhar card
- Pan card
- Passport size photo (2)
- Form -A
- Address Proff
How to Open PPF Account in Tamil:
Public Provident fund தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் திறந்து கொள்ள முடியும்.
தபால் நிலையங்களில் PPF கணக்கினை துவங்க நேரில் சென்று Form-A விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் முகவரி சான்று கொடுத்து கணக்கை திறந்து கொள்ளலாம்.மேலும் குறைந்தபட்ச கட்டணம் 500 செலுத்த வேண்டும்.
PPF Account Benefits:
Compounding Intrest:
Public Provident fund – ன் முதல் சிறப்பு, கூட்டு வட்டி தான்.
Loan:
உங்களுடைய PPF கணக்கின் 3 முதல் 6 ஆண்டுகளுக்கு இடையில், நீங்கள் செலுத்திய தொகையில் 25% கடனாக பெற்று கொள்ளலாம்.
Safe Investment:
PPF திட்டத்தில் செலுத்தும் தொகை 100% பாதுகாப்பானது.மேலும் 1873 ஆண்டு சட்டத்தின் படி பணத்தின் மொத்த உரிமையும் கணக்கை துவங்கியவருக்கே சொந்தம்.
Tax Benefit:
EEE Category – ல் 80c பிரிவின் கீழ், முதலீட்டு தொகை, வட்டி தொகை மற்றும் முதிர்வு தொகை ஆகிய மூன்றுக்கும் வரிச்சலுகை உண்டு.
Tenure:
இத்திட்டம் 15 ஆண்டுகளை கொண்டது.மேலும் 5, 5 ஆண்டுகளாக நீட்டித்து கொள்ளலாம்.
Intrest Rate:
தற்போது (2025 பிப்ரவரி) 7.1% ஆக உள்ளது.இதனை இந்திய அரசு ஒவ்வொரு காலாண்டுக்கும் மாற்றம் செய்கிறது.
Investment Tenure:
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாயும், அதிகபட்சம் 1,50,000 ரூபாயும் செலுத்தலாம்.
Flexibility:
டெபாசிட் தொகை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம், எத்தனை வேண்டுமானாலும் செலுத்தலாம், எப்பொழுது வேண்டுமானாலும் செலுத்தலாம்.
PPF Account Maintenance:
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாயாவது செலுத்த வேண்டும் இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்.மீண்டும் திறக்க ஆண்டுக்கு 50 ரூபாய் அபராதமும் பணம் செலுத்தாத ஒவ்வொரு ஆண்டுக்கும் 500 டெபாசிட் செய்து கணக்கை திறந்து கொள்ளலாம்.
Partial Withdrawal:
5 ஆண்டுகள் முடிந்தபின் செலுத்திய தொகையில் 50% தொகையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அபராதம் செலுத்த வேண்டும்.
Premature Closure:
உங்களுடைய மருத்துவ செலவு, குழந்தைகளில் உயர்கல்வி செலவுக்காக கணக்கை முடித்துக் கொள்ளலாம்.ஆனால் சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.